விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் சார்பில் வாக்கு சேகரிப்பு
சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.;
விழுப்புரம் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வானூர் வட்டம், பொம்மையார்பாளையம் ஊராட்சியில் வளர்மதி, முட்ராம்பட்டில் வீரம்மாள், வீரபாண்டியில் உமாமகேஸ்வரி, அத்தியூர் திருக்கையில் சடையப்பன், சரவணபாக்கத்தில் மணிகண்டன் ஆகியோருக்கு அறிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், குமார், முத்துகுமரன், சங்கரன், அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, முத்துவேல், சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌந்தரராஜன், அர்ச்சணன், முருகன், ராஜீவ்காந்தி, சிவராமன் உட்பட இடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சினர் உட்பட பலர் உடனிருந்தனா்.