பழங்குடி இருளர் குடியிருப்பு: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-28 08:15 GMT

இருளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி ஒன்றியம்,  தும்பூர் ஏரி கரை அருகே வசித்து வரும் பழங்குடி இருளர் இன குடியிருப்பு பகுதியில் மழை வெள்ள சேதாரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்,

அங்கு  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் கூறி, அனைவரும் அரசின் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

Tags:    

Similar News