மழைநீர் வடிகால் வாய்க்கால்: கலெக்டர் மோகன் நேரில் ஆய்வு
விக்கிரவாண்டி அருகே நகர் ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நகர் ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் ரூ.6.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், திட்ட அலுவலர் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.