விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி குழந்தைகள் பலி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி அண்ணன் தங்கை பலி;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சித்தணி கிராமத்தை சேர்ந்தவர் குமார் 30 கூலி தொழிலாளி இவரது மனைவி சங்கரி 25, இவர்களுக்கு தினேஷ் 5 சத்யஸ்ரீ 4 என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
புதன்கிழமை விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசூர் கிராமத்தில் சங்கரியின் பெரியம்மா பெரியநாயகம் இறந்து காரியம் நடந்தது .அதில் கலந்து கொள்ள கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் ஆசூர் கிராமத்திற்கு வந்திருந்தனர்.
புதன்கிழமை மாலை 4 மணி அளவில் தினேஷ் சத்யஸ்ரீ இருவரும் மற்ற குழந்தைகளுடன் பெற்றோர்களுக்கு தெரியாமல் அப்பகுதியில் உள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. கிணற்றில் விழுந்த தினேஷ் சத்யஸ்ரீ இருவரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் கூச்சலிட்டபடி மூழ்கினர். இதைப் பார்த்து பயந்த உடன் வந்திருந்த குழந்தைகள் அருகிலிருந்த இளைஞர்களை உதவிக்கு அழைத்தனர்.
அங்கிருந்த இளைஞர்கள் பெரியவர்கள் ஓடிச்சென்று கிணற்றில் மூழ்கி குழந்தையை காப்பாற்றிய போது இருவரும் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தைகள் இருவரும் இறந்து விட்டதாக கூறினர், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.