பெண் வேட்பாளரிடம் செயின் பறிப்பு - தூங்கிக் கொண்டிருந்தபோது விபரீதம்

விழுப்புரம் அருகே பிரச்சாரம் முடித்து அசதியில் தூங்கிய பெண் வேட்பாளரிடம் செயின் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-10-01 12:00 GMT

விழுப்புரம் மாாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல்நந்திவாடியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு,   அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி முல்லைக்கொடி (வயது 30) போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்தை முடித்து விட்டு,   வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்மமனிதர்கள்,  வெள்ளிக்கிழமை அதிகாலை முல்லைக்கொடியின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவை நைசாக திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,  முல்லைக்கொடியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். திடுக்கிட்டு எழுந்த முல்லைக்கொடி சத்தமிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்ம நபர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து, கஞ்சனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். வழக்குபதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News