விக்கிரவாண்டி அருகே கார் விபத்து

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகே நடந்த கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update: 2021-07-04 04:50 GMT

விக்கிரவாண்டி சுங்கசாவடி அருகே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்க சாவடி அருகே நடைபெற்ற கோர விபத்தில் 3 பேர் பலி ஒருவர் படுகாயம்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தார்வாய்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ஜெயபால். இவர் துபாயிலிருந்து வந்த தனது அக்கா  புஷ்பம், அவரது மகள் அனுப்பிரியா ஆகியோரை சென்னை விமான நிலையத்திலிருந்து  அழைத்துக்கொண்டு சின்ன சேலத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது விக்கிரவாண்டி சுங்க சாவடிக்கு முன்பாக அதிகாலை 6 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிகிறது.  அப்போது திடீரென அவ்வழியாக  சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதி நிலைதடுமாறி அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் தாறுமாறாக இறங்கியது. 

அங்கு விக்கிரவாண்டி சார்ந்த தயாளன் 65, அவரது மனைவி சந்திரா வயசு 55,அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் வயசு 33, ஆகியோர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீதும் அந்த கார் மோதி பின்பு வயல்வெளியில் ஓடி நின்றது. இந்த விபத்தில் செல்வம்,தயாளன், சந்திரா, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ,மணிகண்டன் படுகாயத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காரில் வந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்,

விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் டிஎஸ்பி ரவீந்திரன் உடனடியாக சம்பவ இடத்திறகு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார், பின்னர் விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

Tags:    

Similar News