தொரவி ஏரி நீர் வரத்து வாய்க்கால் உடைப்பு சரி செய்யப்பட்டது

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் உள்ள ஏரிக்கு நீர் வரத்து வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யபட்டது.;

Update: 2021-11-09 13:00 GMT

பொதுமக்கள் உதவியுடன் சீரமைக்கப்பட்ட தொரவி நீர்வரத்து கால்வாய்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட துறவி ஏரிக்கு சிந்தாமணி குச்சிபாளையம் பிரிவிலிருந்து வரும் தண்ணீர், வழியில் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகி வந்தது.

இதனை அறிந்த தொரவி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், பொதுமக்கள் 30 பேர் ஒத்துழைப்போடு நூறு மண் மூட்டை கட்டி உடைந்த பகுதியை சரி செய்து, தண்ணீரை ஏரிக்கு திரும்ப கொண்டு வந்தனர். 

இதற்கு மக்கள் மத்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Tags:    

Similar News