30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் சேவை துண்டிப்பு; மக்கள் அவதி
விக்கிரவாண்டி பகுதிகளில் பிஎஸ்என்எல் சேவை துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றிய பகுதிகளை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் செல்போன் சேவை கடந்த சில நாட்களாக முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.