விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இரத்த தானம்
விழுப்புரம் அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இரத்த தானம் செய்தனர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில் அரசு மருத்துவர் ராஜூ மேற்பார்வையில் வாலிபர் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், கண்டாச்சிபுரம் ஒன்றிய தலைவர் தீர்த்தமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.