விக்கிரவாண்டியில் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

விக்கிரவாண்டி அருகே பனப்பாக்கம் அரசு பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது;

Update: 2021-07-30 13:27 GMT

பனபாக்கம் அரசு பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மதிப்பீட்டு முகாம் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது

விழுப்புரம் கல்வி மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம், பனப்பாக்கம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் பயின்று வருபவர்களுக்கு, குறைந்தபட்ச கற்றல் அடைவு மதிப்பீட்டு முகாம் நடைபெற்று வருகிறது,

முதல் நாளான இன்று ஏழு நபர்களுக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மதிப்பீடு முகாமிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,  மதிவாணன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்  சரவணன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்  காசிநாதன், ஆசிரியர் பயிற்றுநர் மாணிக்கராஜா, ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்,

மதிப்பீடு செய்பவர்களுக்கு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் உட்கார வைக்கப்பட்டது, இம்முகாமில் பள்ளித் தலைமையாசிரியர், ஜெயந்தி, ஆசிரியர்கள், லட்சுமி நாராயணன், தமிழழகன், விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், குணவதி, தன்னார்வலர். சங்கவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News