விக்கிரவாண்டி அருகே அன்பு சிறகுகள் அமைப்பினர் ரத்ததானம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பனமலைபேட்டையில் அன்பு சிறகுகள் அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது

Update: 2022-09-20 10:15 GMT

விக்கிரவாண்டி அருகே அன்பு சிறகுகள் அமைப்பினர் ரத்ததானம் அளித்தனர்

அன்பு சிறகுகள் பவுண்டேசன் சார்பில்  30 யூனிட் ரத்த தானம் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், விக்கரவாண்டி வட்டம், பனமலைபேட்டையில் வெற்றி நிச்சயம் காவலர் பயிற்சி மையத்தின் அன்பு சிறகுகள் பவுண்டேஷன் தொடக்க விழாவை முன்னிட்டு இரத்தத்தான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெற்றி நிச்சயம் கல்வி அறக்கட்டளை நிறுவனர்கள் கோபிநாத்,தினகரன், தணிகாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முகாமில் பனமலை ஊராட்சி கவுன்சிலர் பாரதி சசிகுமார், தலைவர் கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் சரசு தணிகாசலம், மருத்துவர் சங்கிலி தேவன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேச குமார், ஆசிரியர் லோகு, கல்வியாளர் மோகன் மற்றும் பனமலை கிராம மக்கள் நல சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். அரசு விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி அசோக்குமார் தலைமையிலான குழுவினர் சேகரித்த 30 அலகுகள் இரத்தத்தை கொடையாக பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News