அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை காலதாமதம்
விழுப்புரம் மாவட்டம், சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை தாமதம்;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது, இங்கு தற்போது பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து ஆதிதிராவிட மாணவ மாணவிகள் சேர்க்கைகாக பள்ளிக்கு வந்திருந்தனர், அதில் நீண்ட யோசனைக்கு பிறகு மாணவிகளுக்கு பள்ளியில் படிக்க சேர்க்கை அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியர், மாணவர்களுக்கு ஒரு வாரம் கழித்து வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பி வைத்தார், அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்க முடியாமல் கவலையடைந்தனர்
காரணம் விசாரித்த போது மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் வருவதால் அதனை தடுக்க தான் தலைமை ஆசிரியர் அந்த ஊர் முக்கிய பிரமுகர்களின் அறிவுறுத்தல் பேரில் மாணவர்களை பள்ளியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பி உள்ளார் என பள்ளி வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.