விக்கிரவாண்டி அருகே முட்டத்தூரில் பெண் மீது கார் மோதிஉயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி முட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி உயிரிழந்தார்.;

Update: 2022-07-12 01:56 GMT

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள முட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மனைவி விருத்தம்பாள்(வயது 53). இவர் தனது வீட்டின் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் ஒன்று, விருத்தம்பாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த  விருத்தம்பாள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விருத்தம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News