100% வாக்கு பதிவு: குடுகுடுப்பை கலைஞர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூர் கிராமத்தில் நூறு சதவீத வாக்கு பதிவு வலியுறுத்தி குடுகுடுப்பை கலைஞர்கள் பிரச்சாரம்.

Update: 2021-03-30 07:52 GMT

ஜேஆர்சி சார்பில் குடுகுடுப்பை கலைஞர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்.

விழுப்புரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நூறு சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜேஆர்சி மாவட்ட கன்வீனர் ம.செல்லதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முட்டத்தூர் ஒய்காப் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒய்.ஜாக்குலின்ஆஸ்நாத் கலந்து கொண்டு 60 குடுகுடுப்பை கலைஞர்கள் கலந்து கொண்ட நூறு சதவீத வாக்கு பதிவு மற்றும் வாக்கு அளிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ஜேக்கப் ஜீவானந்தம், ஆட்சியர்கள் செல்வகுமார்,பிரேம், வினோத்,கிளமண்ட் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

நிகழ்ச்சியில் குடுகுடுப்பை கலைஞர் முனுசாமி தலைமையில் 60 குடுகுடுப்பை கலைஞர்கள் கலந்து கொண்டு நூறு சதவீத வாக்கு பதிவு மற்றும் வாக்கு அளிக்க உறுதிமொழி எடுத்துகொண்டனர். மேலும் பொதுமக்களிடம் தங்கள் குறிச்சொல்லும் ஸ்டைல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கல்வியறிவில் பின்தங்கிய குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த 60 கலைஞர்கள் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் நூறு சதவீத வாக்கு பதிவுஅவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News