2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் : நாட்டுப்புறக்கலை நலச் சங்கம் மாநில தலைவர் பேட்டி
நாட்டுப்புற கலைஞர்கள் போட்டியிடப்போவதாக அறிவிப்பு
வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் சத்தியராஜ் கூறினார்.
விழுப்புரத்தை அடுத்துள்ள காணைப்பகுதியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நல சங்கத்தின் 12 வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள், பல்வேறு வேடமிட்டு பாட்டுப் பாடியும் நடனமாடியும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மாநில தலைவர் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில தலைமை ஆலோசகர் பழனி, பொதுச்செயலாளர் தங்க ஜெயராஜ் மாவட்டத் தலைவர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் சத்யராஜ் வேட்டியில் பேசுகையில்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கலை நிகழ்ச்சி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும், 58 வயது முடிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது அதிகப்படுத்த வேண்டும், மேலும் முறையான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவது இல்லை எனவும் குற்றம் சாட்டினர் .தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு கோரிக்கையை நிறைவேற்று எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடைய முழு ஆதரவைத் தெரிவிப்போம் அப்படி இல்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாட்டுப்புற கலைஞர்கள் 20 லட்சம் பேர் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் அப்படி இல்லை என்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தனர்.