வானூர் தொகுதியில் வி.சி.க. வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் பிரசாரம்
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் வன்னிஅரசை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னியரசை ஆதரித்து சிபிஎம் கட்சியினர் பொம்பூர், கோரைகேணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், நிகழ்ச்சியில் விதொச மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்ட குழு உறுப்பினர் எம் கே.முருகன்,ஐ.சேகர், எஸ்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.