வானூர் தொகுதியில் விசிக வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-23 10:20 GMT

விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னியரசு கெளாபாக்கம் கிராமத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், விதொச மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் உட்பட கூட்டணி கட்சினர் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News