பட்டா வழங்க வலியுறுத்தி உப்புவேலூர் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
வானூர் தொகுதிக்கு உட்பட்ட உப்புவேலூர் கிராமத்தினர் பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வானூர் தொகுதிக்கு உட்பட்ட உப்புவேலூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்கள். ஆனால் அந்த இடத்திற்கு பட்டா இன்னும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், உப்புவேலூர் கிராமத்தை செய்த பெண்கள் தாங்கள் வீடு கட்டியுள்ள இடத்திற்கு இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மோகனிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.