ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு கவர்னர் வருகை
வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லுக்கு தமிழக கவர்னர் ரவி இன்று வந்தார்.;
ஆரோவில் சர்வதேச நகரத்தில் தமிழக கவர்னர் ரவி
விழுப்புரம் மாவட்டம்,வானூர் அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆரோவில் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.
இதனையடு இன்று காலை சென்னையில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் 10 மணி அளவில் ஆரோவில் பகுதிக்கு வந்தார். கவர்னர் ரவி ஆரோவில் மாதிர் மந்திர்தியானக் கூடத்தில் தியானம் செய்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்,
இதனைத் தொடர்ந்து 2 மாநில கவர்னர்களும் கலந்து கொண்ட ஆரோவில் பவுண்டேஷன் குழுமத்தின் 57-வது பொதுக்குழு கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் ஆரோவில் பவனில் நடைபெற்றது.