பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்: மாதர் சங்கம்
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்;
பெண் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுக்க மாதர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்ட பேரவை கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பி. ராதா தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். சித்ரா கலந்து கொண்டு வழி நடத்தி பேசினார்,
வானூர் வட்டாரத்தில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும் சர்வ சாதாரணமாக காவல் துறை உதவியோடு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கோடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.பின்னர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக வட்டத் தலைவராக எம். யுகந்தியும், செயலாளராக கே. தமிழ்ச்செல்வியும், பொருளாளராக எம். ரம்யா ஆகியோர் உட்பட 14 பேர் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டனர்.