ஆதியன் பழங்குடியினருக்கு நிவாரண உதவிகள்: அமைச்சர் வழங்கினார்
வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஆதியன் பழங்குடியினருக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம்,வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் வசித்து வரும் ஆதியன் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது அங்குள்ள மக்களுக்கு தேவையான அரசி, வேட்டி, சேலை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட வட கிழக்கு பருவ மழை கண்காணிப்பு அலுவலரும்,அரசு செயலாளருமான ஹர்சஹாய் மீனா, மாவட்ட கலெக்டர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர், வானூர் ஒன்றிய சேர்மன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.