வானூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்
வானூர் அருகே நெசல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட நெசல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் ரூ.5,52,000 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, மரக்கன்றுகளை நட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா உட்பட பலர் உடனிருந்தனா்.