விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உலக அமைதிக்காக அமைதி நடை பயணம்
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள ஆரோவில்லில் உலக அமைதிக்காக அமைதி நடை பயணம் இன்று நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். இங்கு உலக அமைதி வேண்டி 500 க்கும் மேற்பட்டோர் ஆரோவில் சோலார் கிச்சனினில் இருந்து மாத்திர் மந்திர் வரை சுமார் 5 கிலோமீட்டர் வரை அமைதி நடைபயணம் நடந்தனர். இதில் வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் ஆரோவில் வாசிகள் குழந்தைகள் கலந்து கொண்டனர். நடைபயணம் முடிவில் ஆரோவில் மாத்திர் மந்திர் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரம் பகுதியில் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.மேலும் ஆரோவில்லில் தற்பொழுது பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் ஆரோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆரோவில் கிளர்ச்சியாளர்கள் கலந்து கொண்ட இந்த அமைதி நடைபயணம் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.