கோட்டகுப்பம் முதல் நகராட்சி சேர்மன் பதவி யாருக்கு?

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய நகராட்சியான கோட்டகுப்பம் எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சுயேட்சைகள் அதிக அளவில் களம் இறங்கவுள்ளனர்

Update: 2022-01-29 07:30 GMT

கோட்டகுப்பம் ஒரு அழகான மற்றும் பசுமையான கடற்கரை சிறியநகரம் . இங்கு எங்கு திரும்பினாலும் தென்னந்தோப்புகளாக காட்சி அளிக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி மாநகரத்தின் நுழைவாயில். சின்ன கோட்டக்குப்பம், இந்திரா நகர், ரஹமத் நகர், சின்ன முதலியர்சாவடி, பெரிய முதலியர்சாவடி,பொம்மையர் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது,. இங்கு காவல் நிலையம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், வங்கிகள் ஆகியவை இப்பேரூராட்சியில் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள ஜாமிய மஸ்ஜித் மசூதி ஆற்காட் நவாப்பினால் 1867 கட்டப்பட்டது

9.59 ச.கி.மீ பரப்பும், 325 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தற்போது நகராட்சியாக அரசு அறிவித்துள்ளது. இந்த நகராட்சியில் 7,048 வீடுகளும், 31,720 மக்கள் தொகை கொண்டது. கல்வி அறிவு 81.4% மும்,1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 933 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.

எஸ்சி மக்கள் 3,888, எஸ்டி மக்கள் 106 உள்ளனர். கோட்டக்குப்பம் புதிய நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் மக்களிடையே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, அந்த எதிர்ப்பு இடையே தற்போது தேர்தல் நடக்க உள்ளது, இந்நிலையில் நகராட்சி தேர்தலில் சுயேட்ச்சைகள் அதிகம் பேர் களம் இறங்க முடிவு செய்து, அவர்கள் தேர்தல் பணியை பல பகுதிகளில் ரகசியமாக தொடங்கவிட்டனர்.

அந்தந்த பகுதி கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் முக்கிய கட்சிகளை தாண்டியும், இங்கு சுயேட்ச்சைகள் அதிகள் பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். சிலர் முடிவு செய்தது மட்டுமில்லாமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நகராட்சி கவுன்சிலர், பதவிகளுக்கு சுயேட்ச்சைகள் அதிகம் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பதவிக்கும் குறைந்த வாக்குகள் மட்டுமே இருப்பதால் வாக்காளர்களை எளிதில் சந்திப்பது, அனைத்து வாக்காளர்கள் எளிதில் பழக்கப்பட்டவர்கள் என்பதால் கட்சியின்றி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்று நம்பிக்கையில் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியாளர்கள் தற்போதே வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.

கோட்டகுப்பம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 11,581 பேர், பெண் வாக்காளர்கள் 12,090 பேர், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 23,673 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த நகராட்சி எஸ்.சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருந்தபோது 2011 பேரூராட்சி தலைவராக ராபியாதுல் பசிரியா சுயேச்சை, துணைத்தலைவராக  அதிமுகவை சேர்ந்த க. சாந்தா ஆகியோர் இருந்தனர் 

மொத்த வார்டுகள் 27

வார்டுகள் இட ஒதுக்கீடு 

எஸ்சி  வார்டு எண்  6

எஸ்சி பெண்கள் வார்டு எண்கள்   10,11

பெண்கள் பொதுப்பிரிவு வார்டு எண்கள்    24,13,19,26,27,21,20,3,12,7,18,2

Tags:    

Similar News