விழுப்புரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பி ரவிக்குமார் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று, தொகுதி மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக சுகாதாரத் துறைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணனுக்கு அவா் அனுப்பி உள்ள கடிதத்தில்
தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், அதிகம் ஏழை மக்களைக் கொண்டதாகவும் இருப்பது விழுப்புரம் மாவட்டம். இங்கே சுகாதாரத் தேவைகளுக்கு மக்கள் பெரிதும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை இல்லாததால், மருத்துவ சேவை கிடைப்பதில் தடை ஏற்பட்டு வருகிறது.விழுப்புரத்தில் தற்போதுள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்தியோ அல்லது புதிதாக ஒரு இடத்தைத் தோ்வு செய்தோ மாவட்ட தலைமை மருத்துவமனையை உடனடியாக விழுப்புரத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.