ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்;
வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி பார்வையிட்டார். அங்கு ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட எஸ்.பி.இராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.