விழுப்புரம் அருகே வானூர் தொகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் உள்ள சலவை தொழிலாளர்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கினர்;
சலவை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய போது.
விழுப்புரம் மாவட்டம், வானூரில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.கலியமூர்த்தி கலந்து கொண்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட சலவைசங்க தலைவர் சி.சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் பி.அண்ணாமலை, வானூர் வட்ட சலவைசங்க செயலாளர் ஏ.பிரகாஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.