வானூரில் 100 நாள் வேலை வழங்க விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை வழங்க வேண்டுமென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம்,வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொழவாரி ஊராட்சியில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
உடனடியாக, சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இன்று முதல் வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த நிகழ்வின்போது, மாவட்ட தலைவர் வி.அர்ஜுனன், நடராஜன் ஆதிமூலம், காளியப்பன், கிளை செயலாளர் கிருஷ்ணன் மற்றும். அன்பரசி, லட்சுமி ஐயங்காவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.