கோட்டகுப்பம் நகராட்சியில் வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் வெற்றி பெற்ற நகராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்;
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்கு உட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சியில் சிபிஎம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஃபர்கத் சுல்தானா புதன்கிழமை பதவியேற்று கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் திண்டிவனம் கோட்டகுப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூர், அனந்தபுரம், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணைநல்லூர், வளவனூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளுக்கும் என 210 நகர்புற நகராட்சி, பேரூராட்சி உறுப்பினருக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற 210 நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்,
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு நகராட்சி ஆணையர் பானுமதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.