வானூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
Food Safety Department - விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.;
Food Safety Department -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழுவினர் வானூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவின் தரத்தை சரிபார்த்தனர். அங்கிருந்த கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்திய 2 ஓட்டல்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 4 ஓட்டல்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2