கடல் அரிப்பை சரி செய்ய மீனவ மக்கள் கோரிக்கை

வானூர் தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவ மக்கள் கோரிக்கை;

Update: 2021-11-15 15:49 GMT

சின்ன முதலியார் சாவடியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர்  தொகுதிக்கு உட்பட்ட கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடியில் கடலரிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடல் அரிப்பு  குடியிருப்பு பகுதிகளை நெருங்கி வருவதால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

அதனால் போர்க்கால அடிப்படையில்.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கடலரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர் ஒன்றிய பாஜக தலைவர் சிவக்குமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News