ஆசிரியர் தகுதித் தேர்வு ஆயுள் முழுவதும் செல்லும் என்ற உத்தரவிற்கு ராமதாஸ் வரவேற்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆயுள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்

Update: 2021-08-24 16:08 GMT

பாமக நிறுவனர் ராமதாஸ்

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்படவுள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது

ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த 10-ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தேன். இரு வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சிி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்கு கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News