வானூர் தொகுதியில் திமுக, சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில் திமுக, சிபிஎம் கட்சியினர்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்;

Update: 2021-09-27 12:48 GMT

கண்டமங்கலம் ஒன்றியம் குராம்பாளையத்தில் வாக்கு சேகரிக்கும் திமுக, சிபிஎம் கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள குராம்பாளையத்தில் திமுக கூட்டணியில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சிபிஎம் நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், முட்ராம்பட்டு ஊராட்சியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் வீரம்மாளுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும், திமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்திலும் திங்கட்கிழமை குராம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்,சிபிஎம் நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஏ.சங்கரன், ஒன்றிய செயலாளர் கே.குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சௌந்தரராஜன், கே.சுந்தரமூர்த்தி, என்.பழனி உட்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News