டிசம்பர் 21 காத்திருப்பு போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு

வானூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் வரும் டிசம்பர் 21ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்நபோவதாக மாநாட்டில் முடிவு செய்தனர்.

Update: 2021-11-07 08:30 GMT

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின்  3வது வட்ட மாநாடு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் 3 வது வட்ட மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு வட்ட தலைவர் ஆர.காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னதாக எல்.சரிதா அனைவரையும் வரவேற்று பேசினார், மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார், வட்ட செயலாளர் வேணுகோபால், மாவட்ட துணைச்செயலாளர் எம்.கே.முருகன் ஆகியோர் வேலை அறிக்கையை முன் வைத்து பேசினர்.

மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிபிஎம் வட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன், தர்மபுரி மாவட்ட செயலாளர் கே.ஜி.கரூரான் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர், தொடர்ந்து ஆர்.காளிதாஸ் வட்ட தலைவராகவும், ஏ.வேணுகோபால் வட்ட செயலாளராகவும், எல்.சரிதா பொருளாளராகவும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் வரும் டிசம்பர் 21ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

Tags:    

Similar News