வானூர் தொகுதியில் அரசு சார்பில் ஐடிஐ அமைக்க சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் அரசு ஐடிஐ அமைக்க வேண்டி சிபிஎம் வட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2021-11-28 02:00 GMT

வானூர் பகுதியில் அரசு ஐடிஐ தொடங்க வேண்டும்  சிபிஎம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்ட 23-வது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது, மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கே.முருகன்,பி.லட்சுமி நாராயணன், ஏ.அன்சாரி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ரவிச்சந்திரன், ஆர்.சேகர், கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் மாநாட்டை தொடங்கி வைத்து  உரையாற்றினார். வேலை அறிக்கையை முன் வைத்து வட்ட செயலாளர் ஜி.ராஜேந்திரன் பேசினார், முன்னதாக வட்ட குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன்  வரவேற்று பேசினார். வட்ட குழு உறுப்பினர் ஐ.சேகர் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கோதண்டம், எஸ்.முத்துகுமரன், மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டை வாழ்த்தி பேசினர்.

மாநாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பாகுபாடின்றி விவசாய கடன் வழங்க வேண்டும். வானூர் பகுதியில் அரசு ஐடிஐ கொண்டு வர வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய வட்ட செயலாளராக எம்.கே..முருகன் தேர்வு செய்யப்பட்டார். புதிய வட்ட குழு உறுப்பினர்களாக எஸ்.பாலமுருகன்,ஆர்.சேகர், ஐ.சேகர், ஏ.அன்சாரி, கே.நடராஜன், வி.சுந்தரமூர்த்தி, கே.மாயவன், என்.அசுவத்தாமன், ஆர்.விசுவநாதன், ஜெ.முகமதுஅனாஸ், கே.லலிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Tags:    

Similar News