வானூர் தொகுதியில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளருக்கு சிபிஎம் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்;
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வன்னிஅரசை ஆதரித்து, பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு கூட்டணி கட்சிகள் சார்பில் கோட்டக்குப்பம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.அறிவழகன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஏ.அன்சாரி, செயலாளர் ஜா.முகமது அனஸ் உட்பட பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.