நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் சீட் கிடைத்த மாணவிக்கு பாராட்டு

நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வு பெற்ற மாணவியை சிபிஎம் கட்சியினர் நேரில் சந்தித்து பாராட்டினர்;

Update: 2022-02-14 13:30 GMT

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்திற்கு உட்பட்ட தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த தேவி என்ற மாணவி  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

அவர் தற்போது அண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வாகியுள்ளார். மாணவி வீட்டுக்கு நேரில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவருக்கு  சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்,

 மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ஜுனன், வட்ட குழு உறுப்பினர்கள் ஐ.சேகர்,கே. சுந்தரமூர்த்தி,ஜி.ஆறுமுகம் மற்றும் கிளை செயலாளர் மற்றும் பலர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News