மறைந்த மாவட்ட செயலாளர் குடும்பத்தினருக்கு சிபிஎம் மாநில செயலாளர் நேரில் ஆறுதல்
காலமான விழுப்புரம் மாவட்ட சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளர் கலியன் வீட்டுக்கு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவரும், முன்னாள் விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளருமான கே.கலியன் கடந்த 26/7/2021 அன்று காலமானார்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அவரது மனைவி தோழர்.தேன்மொழி மற்றும் பிள்ளைகள், உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்,
நிகழ்வில் மாவட்ட செயலாளர் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கட்சி குடும்ப நல உதவி நிதியாக ரூ.1 லட்சத்துகான காசோலையை அவரது மனைவி தேன்மொழியிடம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வழங்கினார்.