கடல் அரிப்பு: மீன மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடற்கரை அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது குறித்து கலெக்டர் மோகன் கலந்துரையாடினார்;
பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கலெக்டர் மோகன், எஸ்பி ஸ்ரீநாதா
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க தொடர்ந்து போராடி வரும் மீனவர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், எஸ்.பி ஸ்ரீ நாதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர்.