கிளியனூர் நெல் கொள்முதல் நிலையதில் விழுப்புரம் நேரில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-07-15 15:21 GMT

கிளியனூர் நெல் கொள்முதல் நிலையதில் விழுப்புரம் நேரில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, கடந்த சில நாட்களாக மாவட்டத்தில்   திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிறது.  இதனை அறிந்த ஆட்சியர் கடந்த சில நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்து சென்று பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அந்த பணி சரியாக நடக்கிறதா என நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.  இந்நிலையில் இன்று வானூர் தொகுதிக்கு உட்பட்ட கிளியனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வட்டாட்சியர் சங்கரலிங்கம் உடனிருந்தார்.

Tags:    

Similar News