கூத்தபாக்கம் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
வானூர் தொகுதிக்கு உட்பட்ட கூத்தபாக்கம் அரசு பள்ளியில் கலெக்டர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்;
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், கீழ்கூத்தப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் த.மோகன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாணவர்களின் வருகை மற்றும் கல்வி தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார், தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தார்.