வானூர் அருகே மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க கிளை மாநாடு
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ரங்கநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், ரங்கநாதபுரம் கிராமத்தில் சங்க கிளை மாநாடு நடைபெற்றது,
மாநாட்டுக்கு அம்மச்சி தலைமை தாங்கினார், மாநாட்டில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.முருகன்,மாவட்ட குழு உறுப்பினர் பி. லட்சுமி நாராயணன், வட்ட தலைவர்ஆர். காளிதாஸ்,வட்ட செயலாளர்ஏ. வேணுகோபால், கிளை செயலாளர் ஜெயகோபால்,கிளை பொருளாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சங்க பெயர் பலகை திறந்து சங்க கொடியேற்றினர்.