வானூர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.
தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ. ஜி. சம்பத் இன்று விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வானூர் தொகுதியில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் இடையஞ்சாவடி அன்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சி நிர்வாகிகள் ஜி. கே ராஜன் தலைமையில் தங்களை பா.ஜ..கவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பின்னர் ஜி. கே ராஜன் தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் தங்க. சிவகுமார், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் பிரேம், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கனகராஜ், ஒன்றிய பொது செயலாளர்கள் லெனின், அய்யப்பன் கார்த்திகேயன், ஒன்றிய துணைத் தலைவர் ரதீஷ், ஒன்றிய செயலாளர் ராஜேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.