கோட்டகுப்பத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம்,கோட்டகுப்பம் நகராட்சியில் 18- வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பர்கத் சுல்தானாவிற்கு ஆதரவாக ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மாநில துணை செயலாளர் கீதா, புதுவை பிரதேச மாதர்சங்கம் மாவட்ட செயலாளர் சத்தியா ஆகியோர் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்