கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வானூர் அருகே கண்டமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், விலைவாசி உயர்வுக்கு காரணமாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட குழு உறுப்பினர் பி.சௌந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.