திருச்சிற்றம்பலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-08-25 11:10 GMT

திருச்சிற்றம்பலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், வானூர், கிளியனூர் ஒன்றியம் மற்றும் கோட்டகுப்பம் நகர அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி தலைமை தாங்கி பேசுகையில், மரக்காணத்தில் செயல்பட இருந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 27-ந்தேதி திண்டிவனத்தில் நடைபெற இருக்கும் அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், பக்தவச்சலம், கோட்டகுப்பம் நகர செயலாளர் கணேசன், அவைத்தலைவர் கஜேந்திரன், கரசானூர் கவுன்சிலர் ஜி.டி.கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் எழில் ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, அம்பேத்குமார், அ.தி.மு.க. பாசறை ஒன்றிய செயலாளர் சுமன், மாணவரணி துணைத் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News