விசிக வேட்பாளர் மனு தாக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னியரசு வேட்பு மனு தாக்கல்;
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னியரசு தனது வேட்பு மனுவை வானூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவாவிடம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.அப்போது மாவட்ட செயலாளர் ஆற்றலரசு உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.