திருவெண்ணைநல்லூர் அருகே இடி மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே திடீரென ஏற்பட்ட இடி மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.;
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலன் மனைவி நிர்மலா (40) இவர் இன்று மாலை 3.45 மணி அளவில் வயல் வெளியில் உள்ள தனது மாடுகளைமேய்க்க வைத்துவிட்டு மாடுகளை மீண்டும் வீட்டிற்கு காந்தலவாடி சாலை வழியாக ஓட்டி வரும்போது இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.