அரகண்டநல்லூர் பேரூராட்சி: அள்ள போவது யாரு?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார்?;

Update: 2022-01-29 13:15 GMT

அரகண்டநல்லூர்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் உள்ளது.

12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

கடந்த 2011 உள்ளாட்சித்தேர்தலில் பேரூராட்சி தலைவராக  எ. ஆர்.வாசிம் ராஜா,  துணைத்தலைவராக பி. ராஜ்  இருந்தனர்.

பேரூராட்சி மொத்த வார்டுகள் 12

எஸ்சி பெண்கள் 12

பெண்கள் பொதுப்பிரிவு 1,3,4,8,11

பொதுபிரிவிற்கு 2,5,6,7,9,10 ஆகிய வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்ற முறை வென்ற அதிமுகவே இந்த முறையும் வெல்லுமா? அல்லது ஆளும்கட்சியான திமுக கைப்பற்றுமா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News