தேர்தல் பணியில் ஈடுபட்ட தினக் கூலிகளுக்கு கூலி வழங்க கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தினகூலிகளுக்கு இதுவரை கூலி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் பணியில் தினக்கூலி அடிப்படையில் தினமும் தொழிலாளிகள் டேபிள், சேர் அமைத்தல், பேரிகார்டு அமைத்தல், தடுப்புக் கட்டைகள், பாத்ரூம் சுத்தம் செய்தல், உணவு வழங்குதல், துப்புரவு, எலக்ட்ரீசியன், பிளம்பர், வாக்குபெட்டிகளை ஏற்றுதல், இறக்குதல் வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு விதமான அடிப்படை வசதிகள் செய்யும் கீழ்மட்ட வேலைகளுக்கு தினக்கூலி பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு அட்வான்சும் கொடுக்கவில்லை, பணி செய்து 30 நாட்களுக்கு மேலாகியும் கூலியும் இதுவரை வழங்கப்படவில்லை, இப்பணியில் 100பேருக்கு மேேல் ஈடுபட்டனர். இவர்களுக்கு கூலி வழங்காமல் கமிஷனை எதிர்பார்த்து சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஏடி பஞ்சாயத்து ஆகியோர் அலைக்கழித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் கூலித் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது, தீபாவளி செலவுக்கு இந்த கூலி தொழிலாளிகளுக்கு கூலி கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.